செய்திகள் மலேசியா
ஜசெக மாநாடு ஒத்திவைத்தது; ஜொகூர், நெகிரி செம்பிலான் தேர்தல்களில் அனைத்து தொகுதிகளையும் ஜசெக தற்காக்கும்: அந்தோனி லோக்
கோலாலம்பூர்:
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் ஜசெக அனைத்து தற்போதைய இடங்களையும் தக்கவைத்துக் கொள்ளும்.
அத்துடன் ஜொகூரில் உள்ள பல கூடுதல் இடங்களிலும் போட்டியிட ஜசெக இலக்கு கொண்டுள்ளது என்று அதன் பொதுச் செயலாளர் அந்தோனி லோக் கூறினார்.
கூடுதல் இடங்களின் உண்மையான எண்ணிக்கை குறித்த முடிவு, நம்பிக்கை கூட்டணிக் கட்சிகளுடனான இறுதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்.
அதன் பின் அவை இந்த வார இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
ஜசெக மத்திய செயற்குழு தனது மாதாந்திரக் கூட்டத்தை நேற்று இரவு நடத்தி, பல நிலைப்பாடுகளை முடிவு செய்தது.
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டதையும், ஜூன் 1, 2026 முதல் 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த அவசியத்தையும் கருத்தில் கொண்டு, ஜூலை 12ஆம் தேதி நடைபெறவிருந்த ஜசெக தேசிய மாநாடு ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்ன்று அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 5, 2026, 6:30 pm
டெய்லர்ஸ் பல்கலைக்கழகத்திலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்: வளாகம் அவசரமாக முடக்கம்
June 5, 2026, 5:17 pm
லெபனானில் ஐ.நா. அமைதிப் படையினர் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் விதித்த மலேசியா
June 5, 2026, 4:38 pm
இன்ஸ்டாகிராமில் கடன் வாங்கி விபரீதம்: பல்கலைக்கழக மாணவருக்கு நேர்ந்த கொடுமை
June 5, 2026, 1:51 pm
பாஸ், அம்னோ இடையிலான சந்திப்பை ஹாடி அவாங் உறுதிப்படுத்தினார்
June 5, 2026, 1:48 pm
ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் டான்ஸ்ரீ மொஹைதின் போட்டியிட மாட்டார்
June 5, 2026, 11:27 am
