செய்திகள் மலேசியா
கெந்திங் ஹைலேண்ட்ஸில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்தது: 7 நேபாள நாட்டினர் காயம்
பத்தாங்காலி:
கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலையில் நேற்று மாலை சுற்றுலாப் பேருந்தும் பெரோடுவா அருஸ் காரும் மோதிக்கொண்ட விபத்தைத் தொடர்ந்து, சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஏழு நேபாள நாட்டினர் காயமடைந்தனர்.
மாலை சுமார் 5.30 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாக பஹாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் சலாஹுத்தீன் இஸா கூறினார்.
நேபாள நாட்டினரான 36 பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்ததில், ஏழு பேர் காயமடைந்தனர். வங்கதேசம், நேபாள நாட்டினரைக் கொண்ட மற்றொரு சுற்றுலாப் பேருந்தில் இருந்த பயணிகள் காயமின்றி தப்பினர் என்று அவர் கூறினார்.
பெரோடுவா அருஸ் காரின் ஓட்டுநரும், அதில் பயணித்த இரண்டு பயணிகளும் காயமின்றி தப்பினர் என்று சலாஹுத்தீன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2026, 1:31 pm
போர்ட் கிள்ளானில் நடந்த மோதல்: 5 பேர் 4 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்
May 31, 2026, 1:22 pm
கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள்: மலேசியாவிடம் நார்வே மன்னிப்பு கோரியது
May 31, 2026, 10:48 am
ஜாலான் பினாங்கு பொழுதுபோக்கு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் மரணம்
May 31, 2026, 10:47 am
