செய்திகள் மலேசியா
கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள்: மலேசியாவிடம் நார்வே மன்னிப்பு கோரியது
கோலாலம்பூர்:
கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு ஏற்றுமதி உரிமம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நார்வே மலேசியாவிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
கடந்த மே 14ஆம் தேதி மலேசியாவிற்கான கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏற்றுமதி உரிமத்தைத் தடுத்த தனது நார்வே நாட்டு சகா ஜோனாஸ் கார் ஸ்டோரிடம், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடும் கண்டனம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
தொலைபேசி உரையாடல் ஒன்றில், 2018 முதல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் ஒவ்வொரு தேவையையும் மலேசியா எவ்வித சந்தேகமுமின்றி நிறைவேற்றியுள்ளது.
நார்வேயின் இந்த நடவடிக்கை, மலேசியாவின் பாதுகாப்பு செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் கடலோரப் போர்க் கப்பல் நவீனமயமாக்கல் திட்டம் ஆகியவற்றில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதோடு, வட்டார சமநிலையிலும் பரந்த தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2026, 1:31 pm
போர்ட் கிள்ளானில் நடந்த மோதல்: 5 பேர் 4 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்
May 31, 2026, 10:48 am
ஜாலான் பினாங்கு பொழுதுபோக்கு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் மரணம்
May 31, 2026, 10:47 am
