செய்திகள் மலேசியா
ஜாலான் பினாங்கு பொழுதுபோக்கு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் மரணம்
ஜார்ஜ்டவுன்:
இங்குள்ள ஜாலான் பினாங்கு சாலையில் உள்ள ஓடியன் கட்டிடத்தில் அமைந்துள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இருப்பினும், அங்கு பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதால், அந்த வளாகம் தற்போது இயங்கவில்லை என்று அறியப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் வெளிநாட்டவர் என நம்பப்படும் ஒருவர் உயிரிழந்ததை பினாங்கு தீயணைப்பு, மீட்புத் துறை இயக்குனர் முகமது ஷோகி ஹம்சா உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையில், பினாங்கு தீயணைப்பு, மீட்புத் துறை செயல்பாட்டு மையம் ஒரு அறிக்கையில், இரவு 8.50 மணிக்கு இந்தச் சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகக் கூறியுள்ளது.
இதைத் தொடர்ந்து தீயணைப்பு நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு, இரவு 9 மணிக்கு முதல் தீயணைப்பு வாகனம் வந்து சேர்ந்தது.
அங்கு, சுமார் 50 x 300 சதுர அடி பரப்பளவு கொண்ட இரண்டு மாடி கிளாஸ் ஏ வகை கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
தீயினால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பிடப்பட்ட சதவீதம் தற்போது 50 சதவிகிதம் ஆகும்.
செயல்பாட்டு மீட்புக் குழு தீயைக் கட்டுப்படுத்தும், அணைக்கும் பணிகளை மேற்கொண்டது.
மேலும் அருகிலுள்ள குழுக்கள் அதற்கு உதவி செய்தன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2026, 1:31 pm
போர்ட் கிள்ளானில் நடந்த மோதல்: 5 பேர் 4 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்
May 31, 2026, 1:22 pm
கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள்: மலேசியாவிடம் நார்வே மன்னிப்பு கோரியது
May 31, 2026, 10:47 am
