செய்திகள் மலேசியா
மஇகாவுக்கு கூட்டணி கதவை மூடியதற்காக தேசியக் கூட்டணி மீது எந்த மனக்கசப்பும் இல்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
ஈப்போ:
மஇகாவுக்கு கூட்டணி கதவை மூடியதற்காக தேசியக் கூட்டணி மீது எந்த மனக்கசப்பும் இல்லை.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.
கூட்டணியில் தங்கள் கட்சியின் நுழைவை தேசியக் கூட்டணி ஏன் ரத்து செய்ய முடிவு செய்தது என்பதைப் புரிந்துகொள்வதாகவும், அவர்களைக் குறை கூறவில்லை.
மஇகா கூட்டணியில் சேர ஏற்கனவே தயாராக இருந்தது உண்மைதான், ஆனால் அந்த முடிவு எடுக்கப்படவில்லை.
தேசியக் கூட்டணியில் சேருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டபோது, அது பெர்சத்து தலைமையிலும், டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் தலைமையிலும் அமைய வேண்டும் என்பதை நாங்கள் அவர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளோம்.
ஈப்போ டி.ஆர். சீனிவாசகம் பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெற்ற மஇகா குடும்ப தின விழாவிற்கு பின் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறினார்.
தலைமை மாற்றம் ஏற்பட்டபோது, நாங்கள் பாஸ் கட்சிக்கு எதிரானவர்கள் என்பதல்ல, இல்லை.
ஆனால், தேசியக் கூட்டணியை பெர்சத்து கட்சிதான் வழிநடத்த வேண்டும் என்று அடிமட்டத் தொண்டர்கள் கட்சித் தலைமைக்கு ஆணை வழங்கியுள்ளனர்.
அதனால், நாங்கள் மீண்டும் பழைய நிலைக்கே திரும்ப வேண்டியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
அதைத் தான் நாங்கள் அவர்களிடம் கூறினோம் என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2026, 1:31 pm
போர்ட் கிள்ளானில் நடந்த மோதல்: 5 பேர் 4 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்
May 31, 2026, 1:22 pm
கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள்: மலேசியாவிடம் நார்வே மன்னிப்பு கோரியது
May 31, 2026, 10:48 am
ஜாலான் பினாங்கு பொழுதுபோக்கு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் மரணம்
May 31, 2026, 10:47 am
