செய்திகள் மலேசியா
பெஜுவாங் கட்சியில் ஹம்சா இணையவில்லை: முக்ரிஸ்
கோலாலம்பூர்:
பெர்சத்து முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடினிடம் இருந்து கட்சியில் இணைவதற்கான விண்ணப்பத்தை பெற்றதை பெஜுவாங் கட்சி மறுத்துள்ளது.
அரசியலில் ஒத்துழைக்க இரு கட்சிகளுக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் கூறினார்.
ஹம்ஸாவை கட்சியில் சேர்ப்பதற்காக அவருடன் பேச்சுவார்த்தைகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, அது உண்மையல்ல என்று அவர் சுருக்கமாகக் கூறினார்.
கட்சியின் அரசியலமைப்பை மீறியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், பிப்ரவரி 13 அன்று பெர்சத்து கட்சியிலிருந்து ஹம்ஸா நீக்கப்பட்ட பிறகு, அரசியலில் அவரது நிலை இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2026, 1:31 pm
போர்ட் கிள்ளானில் நடந்த மோதல்: 5 பேர் 4 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்
May 31, 2026, 1:22 pm
கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள்: மலேசியாவிடம் நார்வே மன்னிப்பு கோரியது
May 31, 2026, 10:48 am
