செய்திகள் மலேசியா
மலாக்கா மாநிலத் தேர்தலில் அனைத்து 28 மாநிலத் தொகுதிகளிலும் தேசியக் கூட்டணி போட்டியிடும்: மொஹைதின்
மலாக்கா:
மலாக்கா மாநிலத் தேர்தலில் அனைத்து 28 மாநிலத் தொகுதிகளிலும் தேசியக் கூட்டணி போட்டியிடும்.
தேசியக் கூட்டணி துணைத் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் இதனை தெரிவித்தார்.
விரைவில் நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில், 28 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக தேசியக் கூட்டணி உறுதி செய்துள்ளது.
வெற்றியை அடைவதற்கான சிறந்த வியூகத்தை வகுப்பதை உறுதி செய்வதற்காக, கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும்.
அனைத்து மட்டங்களிலும் உள்ள அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருவதால், தேசியக் கூட்டணி தற்போது தேர்தலை எதிர்கொள்ளத் தயாரான நிலையில் உள்ளது.
அதே நேரத்தில் தகுதியான வேட்பாளர்களின் பெயர்களைப் பரிசீலனைக்குச் சமர்ப்பிக்குமாறு பெர்சத்து பிரிவுத் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2026, 1:31 pm
போர்ட் கிள்ளானில் நடந்த மோதல்: 5 பேர் 4 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்
May 31, 2026, 1:22 pm
கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள்: மலேசியாவிடம் நார்வே மன்னிப்பு கோரியது
May 31, 2026, 10:48 am
ஜாலான் பினாங்கு பொழுதுபோக்கு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் மரணம்
May 31, 2026, 10:47 am
