செய்திகள் மலேசியா
ஜோகூர் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் பள்ளியில் தோன்றிய எண்ணம் இன்று நிறைவேறி உள்ளது: முக்மின் ஆண்டுக் கூட்டத்தில் டத்தோ வீரா ஷாகுல் ஹமீத்
புத்ரா ஜெயா:
இன்று காலை சைபர் ஜெயா பல்கலைக் கழக மண்டபத்தில் முக்மீன் ஆண்டுக் கூட்டாம் தொடங்கியது.
முன்னதாக, உஸ்தாத் சொல்லமுது கம்பம் பீர் முஹம்மது பாகவியின் பிரார்த்தனையோடு நிகழ்ச்சி தொடங்கியது.
ஃபவுசியா சுல்தானா அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து இடைகாலத் தலைவர் டத்தோ வீரா ஷாகுல் ஹமீத் உரையாற்றினார்.
அவர் தனது உரையில், ஜோகூர் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் பள்ளியில் நோன்புத் திறக்க சென்றிருந்தோம். அங்குதான் நம் சமூகத்திற்காக ஓர் இயக்கமாக செயல்பட்டால் என்ன என்று தோன்றியது. இந்தப் பெயர் உதித்ததும் ஓர் அற்புதம் என்று சொல்வேன்.
நள்ளிரவு 1.00 மணி இருக்கும் டத்தோ காசிம் அலியாவிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. டத்தோ நம் இயக்கத்திற்கு முக்மின் என்று பெயர் வைக்கலாம் என்று கூறினார். ஆலோசித்தோம். நல்ல பெயர் என்று அனைவரும் கூறினர்.
இரண்டு ஆண்டுகள் நாங்கள் இயங்கி வந்தோம். பல நலத் திட்டங்கள் செயல்படுத்தினோம்.
சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இது தோன்றியது.
முக்மின் யாருக்கும் போட்டி இல்லை. நமக்கு நாம் தான் போட்டி. சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்பது மட்டுமே எங்களது இறுதி இலக்கு.
எங்களுக்கு பக்க பலமாக பலர் இருந்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் என் உள்ள்த்தில் ஆழத்தில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனது உரையில் பேசினார்.
நிகழ்ச்சியை நஜீப் கலீஃபுல்லாஹ் சிறப்பாக நெறிப்படுத்தினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 31, 2026, 1:31 pm
போர்ட் கிள்ளானில் நடந்த மோதல்: 5 பேர் 4 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்
May 31, 2026, 1:22 pm
கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள்: மலேசியாவிடம் நார்வே மன்னிப்பு கோரியது
May 31, 2026, 10:48 am
ஜாலான் பினாங்கு பொழுதுபோக்கு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் மரணம்
May 31, 2026, 10:47 am
