நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்து புனித மரபுகளைப் பாதுகாப்பதில் ஆலயங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு தொடர வேண்டும்: டத்தோ சிவக்குமார்

ஈஜோக்:

இந்து புனித மரபுகளைப் பாதுகாப்பதில்
ஆலயங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு தொடர வேண்டும்.

மஹிமா தலைவத் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

சிலாங்கூர் ஈஜோக்கில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியம் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாக விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.

ஆலய நிர்வாகத்தின் கனிவான அழைப்பின் பேரில் இவ்விழாவில் கலந்துக் கொண்டேன்.

ஆன்மீக எழுச்சியூட்டும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்வதில் காட்டிய முன்மாதிரியான அர்ப்பணிப்பு மற்றும் நுணுக்கமான முயற்சிகளுக்காக ஆலய நிர்வாகத்திற்கு எனது பாராட்டுகள்.

சமூகத்திற்குள் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் கலாச்சார விழுமியங்களைத் தொடர்ந்து வலுப்படுத்தும்,

அதே வேளையில், புனிதமான மரபுகளைப் பாதுகாப்பதில் இந்து கோயில்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு தொடர வேண்டும்.

இன்று சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள், தற்போதைய பிரச்சினைகள் இருந்தபோதிலும், கோயில் கொண்டாட்டங்கள் திட்டமிட்டபடி தொடர்வதை உறுதி செய்த கோயில் நிர்வாகங்கள் எனது மனமார்ந்த நன்றி.

சமய நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதிலும், பக்தர்களுக்கு அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சேவை செய்வதிலும் ஆலயங்களில் பங்கு தொடர வேண்டும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset