நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போர்ட் கிள்ளானில் நடந்த மோதல்: 5 பேர் 4 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்

கிள்ளான்:

போர்ட் கிள்ளானில் நடந்த மோதலில் 5 பேர் 4 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

தென் கிள்ளான் போலிஸ் தலைவர் லிம் ஜிட் ஹுவே இதனை தெரிவித்தார்.

போர்ட் கிள்ளானில் உள்ள ஸ்ரீ பெரந்தாவ் பிளாட்ஸ் அருகே கடும் சண்டை நடந்துள்ளது.
இந்த சண்டை தொடர்பான பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலானது.

இது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, ஐந்து உள்ளூர்வாசிகள் நான்கு நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் ஒரு குழுவினருக்கு இடையே நடந்த சண்டைக் காணொளி பரவி வந்ததைத் தொடர்ந்து, நேற்று மாலை சுமார் 4 மணியளவில் தனது துறைக்குக் கிடைத்த தகவலின் பேரில், 18 முதல் 47 வயதுக்குட்பட்ட ஐந்து உள்ளூர்வாசிகள் கைது செய்யப்பட்டனர்.

குற்றவியல் சட்டத்தின் 148வது பிரிவின் கீழ் விசாரணையை நிறைவு செய்வதற்காக, அனைத்து சந்தேக நபர்களையும் இன்று முதல் ஜூன் 3 வரை காவலில் வைப்பதற்கான விண்ணப்பத்தை கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

இந்தப் பிரிவில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset