செய்திகள் இந்தியா
கரப்பான் பூச்சி கட்சியை தொடங்கிய பிறகு சமூக வலைதளங்கள் வாயிலாக பாஜகவினர் எனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர்: அபிஜித் தீப்கே
நியூயார்க்:
அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர் அபிஜித் தீப்கே, கடந்த 16-ம் தேதி ‘‘காக்ரோச் ஜனதா கட்சியை’’ அதாவது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை சமூக வலைதளங்களில் தொடங்கினார்.
இந்த கட்சியில் லட்சக்கணக்கானோர் இணைந்து வருகின்றனர். இதுதொடர்பான சமூக வலைதளங்களை 2 கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.
இந்த சூழலில் அபிஜித் தீப்கே சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஆன்லைனில் புதிய கட்சியை தொடங்கிய பிறகு சமூக வலைதளங்கள் வாயிலாக பாஜகவினர் எனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன என்றார் அபிஜித் தீப்கே.
இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்ற நையாண்டி இயக்கம், தற்போது எல்லை கடந்து பாகிஸ்தான் சமூக ஊடகங்களிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
“அரசியல் அமைப்பு யாரையெல்லாம் கரப்பான் பூச்சிகளாகக் கருதியதோ, அந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் நாங்கள்” என்ற வாசகங்களுடன் இந்த கணக்குகள் இளைஞர்களை ஈர்த்து வருகின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
