செய்திகள் இந்தியா
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
மும்பை:
மும்பையில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களில் 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதனால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, நேற்று ஒரே நாளில் 523 மரங்கள் விழுந்துள்ளன. கோரேகான், குர்லா, மாதுங்கா, தாதர் ஆகிய பகுதிகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்ததால் மும்பையில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் கனமழை காரணமாக மும்பையில் நேற்றும் இன்றும் விமான சேவை பாதிக்கப்பட்டது.

இந்த வாரம் மேலும் மழை பெய்யக்கூடும் என்பதால், வாகனங்களை மரங்களின் அடியில் நிறுத்த வேண்டாம் என்றும், சாய்ந்த மரங்கள் குறித்து உடனடியாக மாநகராட்சிக்குத் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். டெல்லியிலும் நேற்று கனமழை பெய்தது. இதனால் அங்கும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
