செய்திகள் இந்தியா
இன்ஸ்டாகிராமில் சிறார் பாலியல் தொடர்பான விளம்பரங்கள்: மெட்டாவுக்கு 7 நாட்களில் விளக்கம் அளிக்க இந்திய அரசு உத்தரவு
புதுடெல்லி:
சமூக ஊடகத் தளமான இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் கொண்ட கட்டண விளம்பரங்களை நீக்குமாறு மெட்டா நிறுவனத்துக்கு இந்திய அரசு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேலும், இது தொடர்பாக 7 நாட்களில் விரிவான விளக்கம் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் இன்ஸ்டா தளத்தில் இருந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் கொண்ட கட்டண விளம்பரங்களை உடனடியாக நீக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களை பரப்புவதற்கு எதிராக ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.
மேலும், டிஜிட்டல் தளங்கள் அரசின் விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
