செய்திகள் இந்தியா
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
வயநாடு:
கேரள மாநிலம் வயநாட்டில் சுரங்கப்பாதை சாலை கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்கு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலச்சரிவுக்கு அங்கு நடைபெற்ற சுரங்கப்பாதை பணிகளே காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோழிக்கோடு, வயநாட்டை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் வயநாடு சுரங்கப்பாதை சாலை திட்டத்தின் (அனக்கம் பொயில் - கல்லாடி - மேப்பாடி) நுழைவாயில் அருகே, நேற்று (ஜூலை 7) பெய்த கனமழையால் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
கல்லாடியில் உள்ள மீனாட்சி பாலத்துக்கு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. நிலச்சரிவு நடந்ததுமே அப்பகுதியில் இருந்து ஒருவர் சடலமாகவும், 7 பேர் உயிருடனும் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், மேலும் இருவர் உயிரிழந்ததால் பலி இப்போது 3 ஆக அதிகரித்துள்ளது.
நிலச்சரிவு நடந்த சுரங்கப்பாதை திட்டப் பணியாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்புகளுக்கு அருகே இந்த மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
