செய்திகள் இந்தியா
ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்திலும் மனு தள்ளுபடி: நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடுகடத்த தீவிரம்
பாரிஸ்:
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன.
ரூ.14,000 கோடிக்கும் அதிகமான பிஎன்பி வங்கி மோசடி, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்குகளில் நீரவ் மோடி முதன்மை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, அங்குள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை எதிர்த்து, அவர் அங்குள்ள பல்வேறு நீதிமன்றங்களில் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இறுதியாக கடந்த ஏப்ரல் மாதத்தில் நீரவ் மோடி பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
விசாரணையின்போது, இந்தியாவுக்கு அனுப்பப்பட்டால் தான் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படலாம் என்றும், இந்திய சிறைச்சாலைகளின் தரம் மோசமாக இருப்பதாகவும் நீரவ் மோடி தரப்பில் வாதிடப்பட்டது. எனினும், நீரவ் மோடியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, எந்த நேரத்திலும் நீரவ் மோடி இந்தியாவுக்குக் அழைத்து வரப்படலாம் என்று கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
