செய்திகள் இந்தியா
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
மும்பை:
மராட்டிய மாநிலம் ஜால்னா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றின் முதல் வகுப்பு ஏ.சி. தனியறை பெட்டி சொகுசு ஓட்டலின் 'ஹனிமூன் சூட்' போல அலங்கரிக்கப்பட்டு இருந்தது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த அறையின் கூரையில் சிவப்பு, வெள்ளை நிற பலூன்களாலும், இருக்கைகளில் இதயம் போன்று ரோஜா இதழ்களாலும், அறையின் பிற பகுதிகள் மலர் மாலைகள், மலர்களாலும், ஏறும் படிக்கட்டுகளில் செயற்கை வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
படுக்கையில் ஐ லவ் யூ என்ற எழுத்துக்களையும் இடம்பெற செய்து இருந்தது. அந்த அறையே முதல் இரவு அறைபோல் முற்றிலும் மாற்றப்பட்டிருந்தது.
யாரோ ஒரு புதுமண தம்பதிக்காக முன்பதிவு செய்யப்பட்டு இருந்த அந்த பெட்டியை, தனியார் ஏஜென்சி ஒன்று இவ்வாறு மாற்றி இருந்தது.
தங்களின் அலங்கார திறமையை வெளிஉலகிற்கு காட்டுவதற்காக அந்த வீடியோவை சமூக வலைத்ளங்களில் வைரல் ஆக்கி உள்ளது அந்த தனியார் நிறுவனம் என சொல்லப்படுகிறது.
ஆனால் அதில் பயணித்தவர்கள் யார்? என்ற விவரங்கள் தெரியவில்லை. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, ஓடும் ரயிலில் இப்படி அலங்காரம் செய்ய அனுமதி உண்டா? என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் எழுந்தது.
மேலும் சிலர் கடுமையாக விமர்சித்தும் கருத்துகளை பதி விட்டு இருந்தனர். இதற்கு ரயில்வே அதிகாரிகளும் விளக்கம் அளித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
