செய்திகள் இந்தியா
புனேவில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 65 வயது நபருக்கு தூக்கு தண்டனை: சிறப்பு விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
புனே:
புனேவில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 65 வயது நபருக்கு தூக்கு தண்டனை சிறப்பு விரைவு நீதிமன்றம் வழங்கியுள்ளது.
கடந்த மே 1ஆம் தேதி இச்சம்பவம் நடந்த நிலையில், 60 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளி ஏற்கனவே 2 வழக்குகளில் இருந்து தப்பியதாக தெரிவித்த நீதிபதி, அவரிடம் குற்ற உணர்ச்சியோ, திருந்துவதற்கான அறிகுறியோ தெரியவில்லை எனக்கூறி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
மகாராஷ்டிராவின் புனே மாவட்டம், நஸ்ராபூர் கிராமத்தை சேர்ந்தவர் பீமராவ் காம்ப்ளே. அவருக்கு 65 வயது. இவர் கடந்த மே 1ஆம் தேதி தாய் வழி உறவினர் வீட்டுக்கு வந்திருந்த 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். பிறகு சிறுமியை குடும்பத்தினர் தேடிய போது அவரது உடல் மாட்டுத் தொழுவத்தில் கண்டெடுக்கப்பட்டது.
குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரினர். இதனையடுத்து சம்பவம் நடந்த அன்றே குற்றவாளி பீமராவ் காம்ப்ளேவை போலீசார் கைது செய்தனர்.
சிறப்பு நீதிமன்றம் தற்போது முதியவர் காம்ப்ளேவை குற்றவாளி என அறிவித்துள்ளது. இந்நிலையில் முதியவருக்கு நேற்று மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
