செய்திகள் இந்தியா
ஒடிசா மாநிலத்தின் 5-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் படத்தின் இந்திப் பாடலால் சர்ச்சை
கௌஹாத்தி:
ஒடிசா மாநிலத்தின் 5-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த இந்திப் படத்தின் பாடல் தவறுதலாக இடம்பெற்றுள்ளது சர்ச்சையை எழுப்பியுள்ளது. பள்ளிப் பாடப்புத்தகத்தில் சினிமா பாடல் அச்சிடப்பட்டதற்கு கடும் கண்டனக் கணைகள் எழுந்துள்ளன.
ஒடிசா மாநிலத்தில் அண்மையில் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பாடப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் இந்தப் பாடப்புத்தகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து 1999-ல் வெளியான `ஹம் தில் தே சுகே சனம்` என்ற படத்தின் பாடல் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் கடும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. பள்ளி மாணவர்கள் பயிலும் பாடப் புத்தகத்தில் திரைப்படப் பாடல் அச்சிடப்பட்டது எப்படி என்று கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
‘நிம்புடா நிம்புடா' என்று தொடங்கும் இந்தப் பாடல், பாடப்புத்தகத்தில் இடம்பெற்றது எப்படி என்பது புரியாத புதிராக உள்ளது. ஏற்கெனவே அச்சிடப்பட்ட தாள்கள், பாடப்புத்தகத்தை தொகுக்கும்போது தவறுதலாக சேர்க்கப்பட்டு விட்டதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 11:56 am
மட்டன் பிரியாணி போடாமல் சிக்கன் பரிமாறியதால் மோதல்: பிஹார் திருமணத்தில் 12 பேர் காயம்
July 11, 2026, 7:20 pm
ஆல்கஹால் கலந்த இருமல் மருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடு: இந்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
July 11, 2026, 1:29 pm
அமர்நாத் குகைக் கோயில் பனிலிங்கம் சுமார் 90 சதவீதம் வரை உருகி ஓடுகிறது
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
