செய்திகள் இந்தியா
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
ஜகார்தா:
அரசுமுறைப் பயணமாக இந்தோனேசியாவுக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர் மோடிக்கு தலைநகர் ஜகார்த்தாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளில் பிரதமர் மோடி 6 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடியின் விமானம் இந்தோனேசிய வான்பரப்புக்குள் நுழைந்ததில் இருந்தே, இந்தோனேசிய விமானப் படையின் போர் விமானங்கள் பிரதமரின் விமானத்துக்கு பாதுகாப்பு அளித்தவாறு உடன் பறந்து வந்தன.
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, ஜகார்த்தா விமான நிலையத்துக்கு வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தன்னை வரவேற்கும் விதமாக நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சிகளை அவர் பார்வையிட்டார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: ஜகார்த்தா வந்தடைந்தேன். விமான நிலையத்திலேயே என்னை அதிபர் பிரபோவோ வரவேற்றது மனதை நெகிழச் செய்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 11:56 am
மட்டன் பிரியாணி போடாமல் சிக்கன் பரிமாறியதால் மோதல்: பிஹார் திருமணத்தில் 12 பேர் காயம்
July 11, 2026, 7:20 pm
ஆல்கஹால் கலந்த இருமல் மருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடு: இந்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
July 11, 2026, 1:29 pm
அமர்நாத் குகைக் கோயில் பனிலிங்கம் சுமார் 90 சதவீதம் வரை உருகி ஓடுகிறது
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 4, 2026, 5:32 pm
