செய்திகள் மலேசியா
ஊடகப் பணிகளைத் தடுக்கக்கூடிய எந்தவொரு செயலும் ஏற்றுக்கொள்ள முடியாதது: ரவீன் குமார்
ஜொகூர்பாரு:
ஊடகப் பணிகளைத் தடுக்கக்கூடிய எந்தவொரு செயலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஜொகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ரவீன் குமார் கிருஷ்ணசாமி கூறினார்.
ஜொகூர்பாருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு அரசியல் கட்சியின் மாநாட்டு நிகழ்வைச் செய்தியாகப் பதிவு செய்யச் சென்ற ஊடகப் பணியாளர்களுக்கு ஏற்பட்ட குழப்பம், இடையூறு சம்பவங்களை நான் மிகுந்த கவலையுடன் கவனித்துள்ளேன்.
இவ்விவகாரம் குறித்து ஜொகூர் ஊடகக் கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையும், எனது சக சட்டமன்ற உறுப்பினரும், கல்வி, தகவல் ஆட்சிக்குழு உறுப்பினர் அஸ்னான் தாமின் முன்வைத்த கருத்துகளும் என் கவனத்திற்கு வந்துள்ளன.
ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை முன்னிறுத்தும் மாநில நிர்வாகத்தின் ஒருபங்காக, ஊடகப் பணிகளைத் தடுக்கக்கூடிய எந்தவொரு செயலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
தங்களது தொழில்முறை பொறுப்பை நிறைவேற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பைப் பாதிக்கும் விதமான செயல்கள், பதற்றத்தை உருவாக்கும் அணுகுமுறைகள், தேவையற்ற அழுத்தங்கள் போன்றவை ஜொகூரில் நடைபெறும் எந்த நிகழ்விலும் இடம்பெறக் கூடாது.
உண்மையான, நம்பகமான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய பாலமாக ஊடகத்துறை செயல்பட்டு வருகிறது.
நீண்ட காலமாக ஜொகூர் மாநிலம் நாகரிகம், மரியாதை, பண்பாடு, முதிர்ந்த அணுகுமுறை ஆகியவற்றிற்குப் பெயர் பெற்ற மாநிலமாகத் திகழ்கிறது. ஆக்ரோஷம், தூண்டுதல், எல்லை மீறும் செயல்கள் போன்றவை ‘பங்சா ஜொகூர்’ பண்பாட்டைப் பிரதிபலிப்பதல்ல.
நல்லிணக்கம், விவேகம், மரியாதை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தும் பண்பே ஜொகூர் மக்களின் அடையாளமாக இருந்து வருகிறது.
அரசியல் கருத்து வேறுபாடுகளும், பல்வேறு சிந்தனைகளும் முதிர்ச்சியுடன் அணுகப்பட வேண்டுமே தவிர, பதற்றம் உருவாக்கும் வகையில் மாறக்கூடாது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பாதுகாப்பு குழுவினர், நிகழ்ச்சி நிர்வாகத்தினர் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து ஊடகப் பணியாளர்களுக்கு உகந்த, தொழில்முறை சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு கொண்டுள்ளனர் என்று நான் நம்புகிறேன்.
ஊடகத்துறைக்கும் நிகழ்ச்சி நிர்வாகத்திற்கும் இடையிலான நல்லுறவு எப்போதும் பேணப்பட வேண்டும்.
அதேவேளையில், இந்த விவகாரத்தை உரிய வழிமுறைகளின் மூலம் முன்வைத்துள்ள ஜொகூர் ஊடகக் கழகத்தின் நடவடிக்கையை நான் மதிக்கிறேன்.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி நிலைமையைச் சமாதானப்படுத்த வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நம்புகிறேன்.
இந்தச் சம்பவம் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும். ஜொகூர் மாநிலத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் தொழில்முறைத் தன்மை, பாதுகாப்பு, மரியாதை, ஒற்றுமை ஆகிய உயர்ந்த மதிப்புகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதே எங்கள் பொதுவான விருப்பமாகும் என்று ரவீன் குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 21, 2026, 4:12 pm
மலாய் ஒற்றுமை என்பது மற்ற இனங்கள் மீதான விரோதப் போக்கு அல்ல: சிலாங்கூர் சுல்தான்
May 21, 2026, 4:11 pm
குளியலறையில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட ஆணின் சடலம்
May 21, 2026, 1:15 pm
உயர் போலிஸ் அதிகாரி விழுந்து உயிரிழந்த வழக்கில் குற்றச் செயல் எதுவும் பதிவாகவில்லை
May 21, 2026, 12:45 pm
உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தொட்டதற்காக டோனி புவா மீது போலிசார் விசாரணை: டத்தோ குமார்
May 21, 2026, 12:37 pm
பணமோசடி வழக்கு என மிரட்டி நூதனக் கொள்ளையில் சிக்கிய இல்லத்தரசி
May 21, 2026, 12:05 pm
