செய்திகள் மலேசியா
உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தொட்டதற்காக டோனி புவா மீது போலிசார் விசாரணை: டத்தோ குமார்
கோலாலம்பூர்:
அரசியலமைப்பு, ஆட்சியாளர், ருக்குன் நெகாரா தொடர்பான உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தொட்டதாகக் கூறப்படும் தனது முகநூல் கணக்கில் பதிவிட்டதைத் தொடர்ந்து முன்னாள் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா மீது போலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.
பொதுமக்களின் உணர்வை தூண்டும் ஒரு அறிக்கையாகக் கருதப்படும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505(பி), 1998ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.
அந்தப் பதிவு தொடர்பாக நாடு முழுவதும் இருந்து 28 புகார்கள் வந்ததையடுத்து இந்த விசாரணை நடத்தப்படுகிறது.
விசாரணைக்கு உதவுவதற்காக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் போலிஸ் விரைவில் வரவழைக்கும் டத்தோ குமார் கூறினார்.
முன்னதாக மலேசியா ஒரு அரசியலமைப்பு ஆட்சியாளர் முறையைப் பின்பற்றுகிறது.
மன்னரின் அதிகாரம் பொதுவாக சில குறிப்பிட்ட அம்சங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது என்றும் நேற்று ஜசெக ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் ஒரு அறிக்கையை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 21, 2026, 4:12 pm
மலாய் ஒற்றுமை என்பது மற்ற இனங்கள் மீதான விரோதப் போக்கு அல்ல: சிலாங்கூர் சுல்தான்
May 21, 2026, 4:11 pm
குளியலறையில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட ஆணின் சடலம்
May 21, 2026, 1:15 pm
உயர் போலிஸ் அதிகாரி விழுந்து உயிரிழந்த வழக்கில் குற்றச் செயல் எதுவும் பதிவாகவில்லை
May 21, 2026, 12:37 pm
பணமோசடி வழக்கு என மிரட்டி நூதனக் கொள்ளையில் சிக்கிய இல்லத்தரசி
May 21, 2026, 12:05 pm
