நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளோபல் சுமுத் புளோட்டிலா 2.0 ஆர்வலர்களை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும் என பிரதமர் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார்

சிப்பாங்:

இஸ்ரேலால் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள குளோபல் சுமுத் புளோட்டிலா (ஜிஎஸ்எப்) 2.0 மனிதாபிமான ஆர்வலர்களை உடனடியாக விடுவிக்கக் கோருவதற்காக, இருதரப்பு உறவுகளைப் பயன்படுத்தி அனைத்து முயற்சிகளுக்கும் தலைமை தாங்குவதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வர் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.

சுமுத் நூசாந்தாரா கட்டளை மையத்தின் தலைமை இயக்குநர் டத்தோ சானி அராபி அப்துல் அலிம் அராபி, இன்று தொலைபேசி அழைப்பின் மூலம் பிரதமர் எஸ்என்சிசி-யிடம் இந்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதாகக் கூறினார்.

கடத்தப்பட்ட அனைத்து ஆர்வலர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

அவர்கள் கெட்சியோட் சிறையில் அடைக்கப்படுவதைத் தடுப்பதற்கும் பிரதமர் மலேசிய அரசாங்கத்துடன் இணைந்து, நெருங்கிய இருதரப்பு உறவுகளைப் பயன்படுத்தி அனைத்து முயற்சிகளுக்கும் தலைமை தாங்குகிறார்.

மேலும், அவர் துருக்கிய அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset