நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெக்கான் பூலோ கசாப்பில் கடை வீடுகளில் தீ விபத்து: தலா 1,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கினார் யுனேஸ்வரன்

சிகாமட்:

பெக்கான் பூலோ கசாப்பில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கடை வீடுகள் வரிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஆறு உரிமையாளர்கள், வாடகையாளர்களுக்குச் செகாமாட் நாடாளுமன்ற அலுவலகம் அவசர நிதியுதவி வழங்கியது.

ஒவ்வொரு பாதிக்கப்பட்டவருக்கும் தலா 1,000 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சரும் செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் ராமராஜ் அறிவித்தார்.

சேத மதிப்பீடு மற்றும் அடுத்தகட்ட உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை உடனடி நிவாரணமாக இந்தத் தொகை வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், செகாமாட் நாடாளுமன்ற அலுவலகத்தின் சிறப்பு அதிகாரி திரு. பத்மா மற்றும் தன்னார்வலர் திரு. சோங் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை நேரில் பார்வையிட்டனர்.

பாதிக்கபபட்ட ஆறு கடை வீடுகளின்உரிமையாளர்கள் மற்றும் வாடகையாளர்களை சந்தித்து அவர்களின் உடனடி தேவைகளைக் கேட்டறிந்ததுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விரைவான நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

தீயை அருகிலுள்ள மற்ற கடைகளுக்குப் பரவாமல் கட்டுப்படுத்திய மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்குச் செகாமாட்நாடாளுமன்ற அலுவலகம் நன்றி தெரிவித்துள்ளது. அவர்களின் விரைவான நடவடிக்கை பெரிய சேதத்தைத் தடுத்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

தீ விபத்தின் காரணம் குறித்து தீயணைப்பு துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset