செய்திகள் மலேசியா
சுல்தான் மீதான தேர்ந்தெடுத்த விசுவாச அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: டத்தோஶ்ரீ அமிரூடின்
ஷாஆலம்:
எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் தேர்ந்தெடுத்த விசுவாசம் என்ற நடைமுறையை நிறுத்த வேண்டும்.
இந்த நடைமுறை, தங்களின் அரசியல் நிலைக்குப் பயனளித்தால் மட்டுமே மன்னரையும், மதத்தையும், இனத்தையும் பாதுகாப்பதாகக் காட்டிக் கொண்டு, தங்களின் சொந்த நலன்களுக்குச் சாதகமாக இல்லாதபோது அதே கொள்கைகளைப் புறக்கணிக்கிறது.
சிலாங்கூர் அரச நிறுவனத்தின் அதிகாரத்தை வெளித் தரப்பினர் அவமதித்து விமர்சிக்கும்போது, அரசியல் காரணங்களுக்காகத் தாங்கள் மௌனம் காப்பதாக சிலாங்கூர் மந்திரி புசார் அமிரூடின் ஷாரி கூறினார்.
மலேசியா இனவெறி அல்லது மத அச்சத்தின் மீது கட்டப்படவில்லை.
மாறாக, பல்வேறு பின்னணிகளுக்கு இடையேயான ஒருமித்த கருத்து, புரிதல், மலேசியாவைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை ஏற்கும் சட்டத்தின் மேலாதிக்கம் ஆகியவற்றின் மீதுதான் கட்டப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 21, 2026, 4:52 pm
கழுத்தில் ஏற்பட்ட அழுத்ததால் 7 மாத குழந்தை மரணம்
May 21, 2026, 4:12 pm
மலாய் ஒற்றுமை என்பது மற்ற இனங்கள் மீதான விரோதப் போக்கு அல்ல: சிலாங்கூர் சுல்தான்
May 21, 2026, 4:11 pm
குளியலறையில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட ஆணின் சடலம்
May 21, 2026, 1:15 pm
உயர் போலிஸ் அதிகாரி விழுந்து உயிரிழந்த வழக்கில் குற்றச் செயல் எதுவும் பதிவாகவில்லை
May 21, 2026, 12:45 pm
உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தொட்டதற்காக டோனி புவா மீது போலிசார் விசாரணை: டத்தோ குமார்
May 21, 2026, 12:37 pm
