நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 29 மலேசியர்கள் உட்பட மனிதாபிமான ஆர்வலர்கள்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

சிப்பாங்:

இஸ்ரேலின் அஷ்டோட் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் குறைந்தது 87 மனிதாபிமான ஆர்வலர்கள் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

சியோனிச ஆட்சியால் சுமார் 9,500 பாலஸ்தீனியர்கள் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுமுத் நுசந்தாரா கட்டுப்பாட்டு மையத்தின் தலைமை இயக்குநர் டத்தோ சானி அராபி அப்துல் அலிம் அராபி கூறினார்.

உலகளாவிய சுமுத் கப்பல் படை மனிதாபிமான ஆர்வலர்களுக்கு எதிராக அந்த ஆட்சியால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதத் தடுப்புக்காவல், மனிதாபிமானமற்ற நடத்தை,  மனித உரிமை மீறல்களுக்கு எதிரான எதிர்ப்பின் அறிகுறியே இந்தப் போராட்டம்.

மேலும், 9,500 பாலஸ்தீனியக் கைதிகள், குறிப்பாக காசாவைச் சேர்ந்தவர்கள் மீது நியாயமற்ற சட்டங்களைத் திணிக்க உலகம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.

மருத்துவர்கள், சிறார்கள் உட்பட கைது செய்யப்பட்டவர்கள், விசாரணையின்றி தூக்கிலிடப்படுவதற்காகக் காத்திருக்கிறார்கள் என்று அவர் இன்று இங்குள்ள எஸ்.என்.சி.சி.யில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset