செய்திகள் மலேசியா
குளியலறையில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட ஆணின் சடலம்
கோத்தா பாரு:
28 வயதான aஆடவர் ஒருவர், இங்குள்ள ஜாலான் மசூத் பாங் பாயாமில் உள்ள ஒரு வீட்டில், கழுத்தில் குத்துக் காயங்களுடன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
நேற்று மதியம் 1 மணியளவில், குளியலறையில், குடும்ப உறுப்பினர் ஒருவரால், இரத்தம் தோய்ந்த நிலையில் பாதிக்கப்பட்டவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்டவரின் கையில் ஒரு கத்தியும் கண்டுபிடிக்கப்பட்டதாக கோத்தா பாரு மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையாளர் முஹம்மத் அஸ்மிர் டமிரி தெரிவித்தார்.
"குளியலறைக்குச் சென்றபோது, தரையில் இரத்தத்தைப் பார்த்ததாகவும், கையில் கத்தியுடனும், கழுத்தில் காயத்துடனும், பாதிக்கப்பட்டவர் இரத்தக்களரியாக இருப்பதைக் கண்டதாகவும் பாதிக்கப்பட்டவரின் அத்தை கூறினார்.
"மொத்தத்தில், கன்னத்தில் இரண்டு குத்துக் காயங்கள், கழுத்தில் ஒன்று, வயிற்றில் ஒரு சிறிய குத்துக் காயம் இருந்தன.
"மேலதிக விசாரணையில், இறந்தவருக்கு நோய் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டது. இருப்பினும், கடந்த ஆண்டு ஜொகூரில் வேலை செய்யத் தொடங்கியபோது, போதைப்பொருள் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டிருந்தார்" என்று இன்று இங்கு வெளியிட்ட ஒரு அறிக்கையில் அவர் கூறினார்.
பாசிர் குடாங், ஜொகூரில் பணிபுரியும் பாதிக்கப்பட்டவர், கடந்த மே 16 ஆம் தேதி தனது சொந்த ஊருக்குத் திரும்பியதாக முஹம்மத் அஸ்மிர் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் எந்தவொரு சண்டையின் அறிகுறிகளோ அல்லது குற்றச் செயலின் அறிகுறிகளையோ போலிஸார் கண்டுபிடிக்கவில்லை என்றும், இதுவரை இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
"பிரேத பரிசோதனைக்காக, இறந்தவரின் உடல் இங்குள்ள ராஜா பெரெம்புவான் சைனாப் II மருத்துவமனையின் (HRPZ II) தடயவியல் பிரிவிற்கு அனுப்பப்பட்டது. மேலும், கழுத்தில் ஏற்பட்ட குத்துக் காயமே மரணத்திற்குக் காரணம் என உறுதி செய்யப்பட்டது.
"விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு குறித்து எந்தவொரு ஊகத்தையும் செய்ய வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்றார் அவர்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 21, 2026, 4:52 pm
கழுத்தில் ஏற்பட்ட அழுத்ததால் 7 மாத குழந்தை மரணம்
May 21, 2026, 4:12 pm
மலாய் ஒற்றுமை என்பது மற்ற இனங்கள் மீதான விரோதப் போக்கு அல்ல: சிலாங்கூர் சுல்தான்
May 21, 2026, 1:15 pm
உயர் போலிஸ் அதிகாரி விழுந்து உயிரிழந்த வழக்கில் குற்றச் செயல் எதுவும் பதிவாகவில்லை
May 21, 2026, 12:45 pm
உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தொட்டதற்காக டோனி புவா மீது போலிசார் விசாரணை: டத்தோ குமார்
May 21, 2026, 12:37 pm
