செய்திகள் மலேசியா
உலக இளம் கண்டுபிடிப்பாளர்கள் கண்காட்சி: செந்தூல் செயிண்ட் ஜோசப் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை
கோலாலம்பூர்:
கோலாலம்பூர் கண்காட்சி மையத்தில் நடைப்பெற்ற உலக இளம் கண்டுபிடிப்பாளர்கள் அறிவியல், புதுமை கண்காட்சியில் செயிண்ட் ஜோசப் பெண்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.
பள்ளியிலிருந்து பங்கேற்ற இரண்டு அணிகளும் தங்களின் புதுமையான அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம் தங்க மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தீ பாதுகாப்பு, எச்சரிக்கை தொடர்பான புதுமையான கண்டுபிடிப்பை உருவாக்கிய அணி தங்கப் பதக்கத்தை வென்றது.
இவர்கள் உருவாக்கிய கண்டுபிடிப்பு, தீ விபத்துகளை முன்கூட்டியே கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, இயற்கை மூலப்பொருட்களை பயன்படுத்தி “Naturelock Hair Clay” உருவாக்கிய மற்றொரு அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
இவர்கள் தயாரித்த இயற்கை தலைமுடி திரவியம் (Hair Clay), ஆரோக்கியமான தலைமுடி பராமரிப்பையும், நிலையான சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் முன்னிறுத்தும் வகையில் அமைந்திருந்தது.
துர்கேசினி கலைக்குமார், கீர்த்திகாசினி கலைக்குமார், வைஷ்ணவி அகஸ்தியர், வித்யா அகஸ்தியர், ஹவீனா சுந்தரம், மனுஶ்ரீ பிரகாஷ், திலோசினி கலைக்குமார், வந்தனா கானபிரகாஷ், லோனிகா விஜயகுமார், அனோஷ்கா ஸ்ரீ விக்னேஷ் ஆகிய மாணவிகள் இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களாவர்.
இந்த வெற்றி, மாணவர்களின் அறிவியல் ஆர்வம், படைப்பாற்றல், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகும்.
பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்களின் சாதனையை பெருமையுடன் பாராட்டியுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 21, 2026, 4:12 pm
மலாய் ஒற்றுமை என்பது மற்ற இனங்கள் மீதான விரோதப் போக்கு அல்ல: சிலாங்கூர் சுல்தான்
May 21, 2026, 4:11 pm
குளியலறையில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட ஆணின் சடலம்
May 21, 2026, 1:15 pm
உயர் போலிஸ் அதிகாரி விழுந்து உயிரிழந்த வழக்கில் குற்றச் செயல் எதுவும் பதிவாகவில்லை
May 21, 2026, 12:45 pm
உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தொட்டதற்காக டோனி புவா மீது போலிசார் விசாரணை: டத்தோ குமார்
May 21, 2026, 12:37 pm
