நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாய் ஒற்றுமை என்பது மற்ற இனங்கள் மீதான விரோதப் போக்கு அல்ல: சிலாங்கூர் சுல்தான்

ஷாஆலம்:

மலாய் ஒற்றுமையை, இந்த நாட்டில் உள்ள மற்ற அனைத்து இனங்கள் மீதும் விரோதப் போக்கைக் காட்டும் ஒரு முயற்சியாகத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது.

சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இத்ரிஸ் ஷா இதனை  வலியுறுத்தினார்.

ஒரு தேசம் ஒன்றாக வாழ்வதன் வலிமை, நாட்டை மேலும் அமைதியானதாகவும், நிலையானதாகவும் ஆக்கும். அதன் மக்கள் ஒருவரையொருவர் மதிப்பார்கள்.

தியாகப் பெருநாள் கொண்டாட்டத்தின் நன்னாளில், இந்த நாட்டில் உள்ள அனைத்து இனங்களும், தேசங்களும், மதங்களும் ஒருவருக்கொருவரின் உணர்வுகளை மதித்து, அமைதியாக வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

உதுமானியப் பேரரசின் காலத்தில், பல இன சமூகங்கள் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இணக்கமாக வாழ்ந்தபோது, ​​இஸ்லாமிய நாகரிகம் ஒரு காலத்தில் அதன் பொற்காலத்தை எட்டியது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

இன்று 2026 தியாகப் பெருநாள் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்ட செய்தியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset