செய்திகள் இந்தியா
இந்தியாவின் வெப்பமான பகுதியாக உத்தரப்பிரதேசத்தின் பாண்டா மாவட்டம்: வெப்ப நிலை 47.6 டிகிரி செல்சியஸாக பதிவு
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் புந்தேல்கண்ட் பிராந்தியத்தில் உள்ள பாண்டா மாவட்டம் கடந்த திங்கட்கிழமை அன்று இந்தியாவின் மிக வெப்பமான பகுதியாக உருவெடுத்தது. அங்கு பகல் நேர வெப்ப நிலை 47.6 டிகிரி செல்சியஸாக பதிவாகி, உலகின் மிக உயர்ந்த வெப்பநிலையை எட்டியுள்ளது.
கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மாவட்டத்தில் மே மாதத்தில் மிக அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதற்கு முன்பு, கடந்த ஏப்ரல் 27-ம் தேதியும் இந்த மாவட்டத்தில் 47.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதையடுத்து, உலகின் வெப்பமான நகரங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
மேலும், மே 19 (48.2 டிகிரி), மே 17 (46.4 டிகிரி) மற்றும் ஏப்ரல் 17 (45.4 டிகிரி) ஆகிய மூன்று நாட்களில் பாண்டா ஆசியாவிலேயே மிக அதிக வெப்ப நிலையைப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், பாண்டா மாவட்டத்தின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த வெப்ப நிலையாக ஜூன் 10, 2019 அன்று பதிவான 49.2 டிகிரி செல்சியஸ் மட்டுமே நீடிக்கிறது. ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் என்னவென்றால், இந்த நகரம் அடிக்கடி 47 மற்றும் 48 டிகிரி செல்சியஸைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.
வறண்ட பாறைகள் நிறைந்த நிலப்பரப்பு, மறைந்து வரும் பசுமைப் போர்வை, இடைவிடாத மணல் கொள்ளை மற்றும் வற்றிப்போகும் ஆறுகள் ஆகியவற்றால், பாண்டா மாவட்டம் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு வெப்பத் தீவாக மாறி வருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
