நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தங்கச் சுரங்கத்தில் நேர்ந்த விபரீதம்: பள்ளத்தில் புதைந்த உயிர்கள்

ஜெலி: 

நேற்றிரவு இங்குள்ள ஜெரிம்போங் எண்ணெய் பனைத் தோட்டத்தின் துணை ஆற்றுப் பகுதியில், தங்கச் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, இரண்டு மீட்டர் உயர ஆற்றங்கரை சரிவில் மண்ணில் புதைந்து இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர்.

இரவு 8.20 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், மேலும் ஒருவர் உயிர் தப்பியதாகத் தெரிகிறது.

ஜெலி தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் அட்னி இப்ராஹிம், மண்ணில் புதைந்து போனவர்கள் குறித்து அவசர அழைப்பைத் தாம் பெற்றதாகவும், அதற்குப் பின்னர், தேடுதல், மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக, ஜெலி தீயணைப்பு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஒன்பது உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாகத் தெரிவித்தார்.

"இருப்பினும், தோட்டப் பகுதிக்குள் நுழைவதற்கான பாதைகள் குறுகியதாகவும், சவாலானதாகவும் இருந்ததால், தீயணைப்பு வாகனங்களால் நுழைய முடியவில்லை. இதனால், சம்பவ இடத்திற்குள் நுழைவதற்கு டொயோட்டா ஹிலக்ஸ் பிக்-அப் வாகனத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.

"தேடுதல் நடவடிக்கை இரவு 9.20 மணிக்குத் தொடங்கப்பட்டது. இரண்டு மீட்டர் உயர கரை சரிவில் மண்ணில் புதைந்து இரண்டு பேர் இருப்பதாகக் கண்டறியப்பட்டது" என்றார் அவர்.

முதல் பாதிக்கப்பட்டவர் இரவு 9.25 மணிக்கும், இரண்டாவது பாதிக்கப்பட்டவர் இரவு 11.18 மணிக்கும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

"30 வயதுக் கடந்த இரு ஆண்களும், சுகாதாரப் பணியாளர்களால் சம்பவ இடத்திலேயே இறந்ததாக உறுதி செய்யப்பட்டனர். மேலதிக நடவடிக்கைக்காக அவர்கள் போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்" என்றார் அவர்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset