செய்திகள் இந்தியா
சத்தீஸ்கரில் பெட்ரோலுக்கு கட்டுப்பாடு: இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.300க்கும் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.1000க்கு மட்டுமே பெட்ரோல் வழங்க உத்தரவு
ராய்ப்பூர்:
சத்தீஸ்கரின் பல மாவட்டங்களில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பான வதந்தி காரணமாக மக்கள் பதற்றத்தில் அதிகளவில் பெட்ரோல், டீசலை வாங்கி குவிப்பதை காண முடிந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்ட ஆட்சியர் பகவான் சிங் உய்கே நேற்று முன்தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், ‘‘எரிபொருள் இருப்பு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.300-க்கு அதிகமாகவும் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.1,000-க்கு அதிகமாகவும் பெட்ரோல் வழங்கக் கூடாது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பேரல்கள், பாட்டில்களில் பெட்ரோல், டீசல் விற்கக் கூடாது.
அதேநேரம் ஆம்புலன்ஸ்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ103.53க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
