செய்திகள் மலேசியா
அந்நியத் தொழிலாளர்கள், குத்தகைகள் உட்பட இந்திய குத்தகையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசு உதவ வேண்டும்: ஆனந்தன்
கோலாலம்பூர்:
அந்நியத் தொழிலாளர்கள், குத்தகைகள் உட்பட இந்திய குத்தகையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசு உதவ வேண்டும்.
மலேசிய இந்திய குத்தகையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆனந்தன் இதனை கூறினார்.
மலேசிய இந்திய குத்தகையாளர்கள் சங்கத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா விமரிசையாக நடைபெற்றது.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடியின் சிறப்பு அதிகாரின் டத்தோ வீரா மெகாட் ஜூன்கர்னாய்ன் இவ்விழாவிற்கு தலைமையேற்றார்.
அதே வேளையில் பல்வேறு பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
கடந்த 25 ஆண்டுகளாக மலேசிய இந்திய குத்தகையாளர்கள் சங்கம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
குறிப்பாக இந்திய குத்தகையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதுடன் தீர்வையும் கண்டுள்ளோம்.
மேலும் பல்வேறு பயிற்சிகளின் வாயிலாக அதிகமான இளைய குத்தகையாளர்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
எங்களின் இப்பணி தொடரும். நாட்டில் அதிகமான இந்திய குத்தகையாளர்கள் உருவாக வேண்டும்.
இதுவே எங்களின் அடுத்த இலக்காகும் என்று அவர் கூறினார்.
இதனிடையே அந்நிய தொழிலாளர்கள், அரசாங்க குத்தகைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளை இந்திய குத்தகையாளர்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
இப்பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்க வேண்டும் என்று ஆனந்தன் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2026, 5:01 pm
ஜூலை 1 முதல் அனைத்து ஏடிஎம்களிலும் பணம் எடுப்பதற்கு 1 ரிங்கிட் கட்டணம் இல்லை
June 15, 2026, 4:30 pm
புக்கிட் ஜாலிலில் ஆடம்பர குடியிருப்பில் இயங்கிய மினி காசினோ முறியடிப்பு: 15 பேர் கைது
June 15, 2026, 3:45 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் தேர்தல்களுக்கு காவல்துறை தீவிரமான தயாரிப்பில் உள்ளது
June 15, 2026, 3:04 pm
