நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

வெள்ளப் பேரிடர்களால் சொத்துடமைகளின் மதிப்புகள் வீழ்ச்சியடையலாம்

கோலாலம்பூர்: 

வெள்ளப் பேரிடர்களால் சொத்துடமைகளின் மதிப்புகள் வீழ்ச்சியடையலாம் என்று சொத்துடமை ஆய்வாளர் பைசூர் ரிட்சுவான் கூறினார்.

நாட்டில் தொடர்ந்து பெய்து கனமழையின் காரணமாக கிள்ளான் பள்ளத்தாக்கு, சிலாங்கூரில் கடும் வெள்ளப் பேரிடர் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக ஷாஆலம் ஸ்ரீ மூடா, உலுலங்காட் உட்பட பல பகுதிகள் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டன.

இந்த வெள்ளப் பேரிடரால் மக்கள் பல இழப்பீடுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்தவொரு சூழ்நிலையில் வெள்ளப் பேரிடரினால் சொத்துடமைகளில் மதிப்புகளும் வீழ்ச்சி காணும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீ தாமான் ஸ்ரீ மூடா, உலுலங்காட் வட்டாரங்களில் உள்ள சொத்துடமைகளின் மதிப்புகளும் வீழ்ச்சியடையலாம்.

அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் இதற்கான அறிகுறிகள் மக்களுக்கு தெரிய வரும்.

குறிப்பாக இங்குள்ள சொத்துடமைகளின் மதிப்புகள் உயராமல் போகலாம் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset