செய்திகள் இந்தியா
வீட்டில் இருந்து வேலை திட்டம்: ஒரே நாளில் ஒரு நகரில் 6 லட்சம் லிட்டர் பெட்ரோலை மிச்சப்படுத்த முடியும்
ஹைதராபாத்:
ஹைதராபாத்தை சேர்ந்த அஸ்ட்ரோ வால்டாய்ஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனத் தலைமை செயல் அதிகாரி ராதா கிருஷ்ண காவலூரு சமூக வலைதளத்தில் இந்த ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
எனது முந்தைய நிறுவனத்தின் ஊழியர்கள் சராசரியாக 15 கி.மீ. தொலைவு பயணம் செய்து அலுவலகத்துக்கு வந்தனர். பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தினர்.
ஒரு மோட்டார் சைக்கிள் ஒரு லிட்டர் பெட்ரோலில் 45 கி.மீ. வரை செல்லும். இதன்படி 3 ஊழியர்களின் ஒரு வழி பயணத்துக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் தேவைப்படும்.
ஹைதராபாத்தில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சுமார் 12,000 பேர் பணியாற்றுகின்றனர். அவர்கள் அலுவலகத்துக்கு செல்ல தினமும் 8,000 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது.
ஹைதராபாத் முழுவதும் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 9 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். அவர்கள் மோட்டார் வாகனங்களில் அலுவலகங்களுக்கு செல்ல தினசரி 6 லட்சம் லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது.
இவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து வேலை செய்தால் ஒரே நாளில் ஹைதராபாத் நகரில் 6 லட்சம் லிட்டர் பெட்ரோலை சேமிக்க முடியும்.
நாடு முழுவதும் மோட்டார் வாகனங்களுக்கு தினசரி 58.1 கோடி லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டத்தால் பெருமளவு பெட்ரோலை சேமிக்க முடியும்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டால் ஓராண்டில் ரூ.15,000 கோடிக்கும் அதிகமாக சேமிக்க முடியும். இதன்மூலம் ஓராண்டில் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நியச் செலாவணியை சேமிக்க முடியும்.
இதனால் பெட்ரோல் மிச்சமாவதோடு, நாடு முழுவதும் போக்குவரத்து நெரிசலும் கணிசமாகக் குறையும். இவ்வாறு ராதா கிருஷ்ண காவலூரு தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
