செய்திகள் இந்தியா
இந்தியாவில் புழுதிப் புயலால் 117 பேர் உயிரிழப்பு: 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
லக்னோ:
இந்தியாவில் உத்தர பிரதேசத்தின் பரேலி பகுதியில் வீசிய புழுதிப் புயலில், ஒரு திருமண மண்டபத்தின் மேற்கூரையோடு சேர்த்து தொழிலாளி ஒருவர் 50 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டார்.
அந்தப் புழுதிப் புயலால் 117 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
வடஇந்திய மாநிலங்களில் கோடை காலத்தில் நிலங்கள் வறண்டு விடுகின்றன. இதனால் மண் பொடியாக மாறி காற்றில் கலக்கிறது. அதிக வெப்பத்தால் வலுவான குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகிறது.
இதுபோன்ற காரணங்களால் வடஇந்திய மாநிலங்களில் மே, ஜூன் கோடை காலத்தில் புழுதிப் புயல்கள் உருவாகின்றன. அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் புழுதிப் புயல் வீசக்கூடும் என்று சில நாட்களுக்கு முன்பே வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், கடந்த 13-ம் தேதி மாலையில் உத்தர பிரதேசத்திலும் அண்டை மாநிலங்களிலும் புழுதிப் புயல் வீசியது. உத்தர பிரதேசத்தில் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் புழுதிப் புயல் வீசியது. பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழையும் பெய்தது. புழுதிப் புயலால் பிரயாக்ராஜ், பதோஹி, மிர்சாபூர், பதேபூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 117 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பரேலி பகுதியை சேர்ந்த தொழிலாளி நான்கி மியான் (50). இவர் 13-ம் தேதி மாலை அங்குள்ள திருமண மண்டபத்தின் மாடியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பலத்த காற்று வீசியது.
திருமண மண்டப மாடியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையின் இரும்புக் கம்பியை அவர் கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தார். ஆனால், காற்றின் வேகத்தால் மேற்கூரை பெயர்ந்து பறந்தது. அதோடு தொழிலாளி நான்கி மியானும் சுமார் 50 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டார். தரையில் விழுந்த அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
