செய்திகள் வணிகம்
சபாவில் இருந்து ஆப்பிரிக்கா வரை: பனைத் தொழிலில் புதிய பொருளாதாரப் புரட்சி
தாவாவ்:
மலேசியா-ஆப்பிரிக்கா பொருளாதார உறவுகளைப் புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் வகையில், சபாவின் முக்கிய பனை எண்ணெய் நிறுவனமான சாவிட் கினபாலுவும், சாம்பியாவின் முன்னணி விவசாய வணிக நிறுவனமான சாம்பாம் லிமிடெடும் (Zampalm Limited) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒத்துழைப்பை சர்வதேச நிகழ்வு, வர்த்தக மேலாண்மை நிறுவனமான மை ஈவென்ட்ஸ் இன்டர்நேஷனல் முன்னெடுத்து வெற்றிகரமாக ஏற்பாடு செய்துள்ளது.
2024 ஆம் ஆண்டு முதல் ஆப்பிரிக்க நாடான சாம்பியாவுக்கு மேற்கொள்ளப்பட்ட உயர்மட்ட வர்த்தகப் பயணங்கள், தொழில்துறை ஆய்வுகள், கண்டங்களைத் தாண்டிய பொருளாதார உரையாடல்களின் விளைவாக இந்த முக்கிய ஒப்பந்தம் உருவாகியுள்ளது.
இந்த முயற்சிக்கு சாம்பியா குடியரசும் தொடர்ந்து ஆதரவு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார, தொழில்துறை, முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும் புதிய கதவாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.
மை ஈவென்ட்ஸ் இன்டர்நேஷனலின் பொது மேலாளர் டைலன் முஹம்மத் ரவி, “2024 முதல் திட்டமிட்ட பார்வை இன்று நிஜமாகியுள்ளது. மலேசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையில் உயர்மதிப்புள்ள பொருளாதார ஒத்துழைப்புகளை உருவாக்குவதே எங்கள் நோக்கம். இது சாதாரண ஒப்பந்தம் அல்ல… வர்த்தக இராஜதந்திரத்தின் சக்தியை உலகிற்கு காட்டும் முக்கிய தளமாகப் பார்க்கப்படுகிறது,” என்று தெரிவித்தார்.
இந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், சாம்பாம் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் முத்தாலே, சாம்பியா தூதரகத்தின் பொருளாதாரப் பிரிவு அதிகாரி சகாலிமா யோயோ ஆகியோர் கோலாலம்பூருக்கு வருகை தந்து, பின்னர் தாவாவுக்கு இரண்டு நாள் தொழில்துறை பயணத்தை மேற்கொண்டனர்.
அவர்கள் சாவிட் கினபாலு தோட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு பயன்படுத்தப்படும் நவீன விவசாய தொழில்நுட்பங்கள், நிலையான பனை மேலாண்மை முறைகள், உற்பத்தி செயல்முறைகளை நேரில் பார்வையிட்டனர்.
இதோடு மட்டுமல்லாமல், “வர்த்தகமும் சுற்றுலாவும்” என்ற அணுகுமுறையின் கீழ், உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமான செம்போர்னாவிலும் அந்த பிரதிநிதிகள் குழு வரவேற்கப்பட்டது. இதன் மூலம், சபா தொழில்துறை முதலீட்டு மையமாக மட்டுமல்லாமல், சர்வதேச சுற்றுலா, கலாச்சார பரிமாற்றத்தின் முக்கிய தளமாகவும் திகழ்கிறது என்ற செய்தி வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வெற்றி, எதிர்காலத்தில் ஆசியான், ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையில் மேலும் பல பொருளாதார, வர்த்தக ஒத்துழைப்புகளுக்கு முன்னோடியாக அமையும் என மை ஈவென்ட்ஸ் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இளைஞர் மேம்பாடு, சட்டக் கல்வி, சர்வதேச வர்த்தக துறைகளிலும் கவனம் செலுத்தி வரும் அந்த நிறுவனம், தொழில்முறை முன்னேற்றம், நாட்டின் பொருளாதார செழிப்பை ஊக்குவிக்கும் புதிய தளங்களை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
