செய்திகள் இந்தியா
மே, ஜூன் மாதம் வரை 500 சர்வதேச விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டது உண்மை: Air India தன்னிலை விளக்கம்
புது டெல்லி:
அனைத்துலக விமானச் சேவைகளை முற்றிலும் ரத்துச்செய்யவில்லை என்று ஏர் இந்தியா (Air India) நிறுவனம் கூறியுள்ளது.
ஏர் இந்தியா அதன் அனைத்துலக விமானப் பயணங்கள் அனைத்தையும் ரத்துச்செய்துவிட்டதாக அண்மையில் சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.
ஈரான் போரால் எண்ணெய்ப் பற்றாக்குறை நீடிப்பதால் ஜூலை மாதம் வரை விமானச் சேவைகள் ரத்துச்செய்யப்படுவதாகப் பதிவில் கூறப்பட்டிருந்தது.
அதைப் படித்த பயணிகள் சிலர் குழம்பினர்.
அது பொய்த்தகவல் என்று ஏர் இந்தியா X தளத்தில் தெளிவுபடுத்தியது.
சரியான தகவல்களைத் தெரிந்துகொள்ள நிறுவனத்தின் அதிகாரத்துவத் தளங்களை நாடும்படி அது பயணிகளைக் கேட்டுக்கொண்டது.
எரிபொருள் பற்றாக்குறையால் ஏர் இந்தியாவின் சில விமானச் சேவைகளே ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
ஏப்ரல், மே மாதங்களில் 500க்கும் மேற்பட்ட அனைத்துலகப் பயணங்கள் ரத்துச்செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஜூன் மாதத்திலிருந்து மேலும் சில விமானச் சேவைகள் ரத்துச்செய்யப்படலாம் என்று நம்பப்படுகிறது.
புதுடில்லி - சிங்கப்பூர் இடையிலான விமானச் சேவையும் அதில் அடங்கும் என்று The Economic Times ஊடகம் சொன்னது.
புதுடில்லிக்கும் சிக்காகோ (Chicago), நியூவார்க் (Newark), ஷங்ஹாய் (Shanghai) ஆகியவற்றுக்கான விமானச் சேவைகளும் பாதிக்கப்படுமென அது கூறியது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
