செய்திகள் வணிகம்
உலக சந்தையை அதிரவைக்கும் மலேசிய நாணயத்தின் மீட்சி
கோலாலம்பூர்:
உள்ளூர் நாணயம் தொடர்ந்து உயரும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ரிங்கிட் இன்று அதிகமாகத் திறந்து, அதன் வலுவூட்டும் வேகத்தைத் தொடர்ந்தது.
மலேசியாவின் நடுவண் வங்கியான மலேசிய தேசிய வங்கி, ஒரே இரவில் கொள்கை விகிதத்தை (OPR) 2.75 சதவீதமாகத் தக்கவைக்கும் என்று சந்தை ஒருமித்த கருத்து எதிர்பார்க்கிறது.
காலை 8 மணிக்கு, ரிங்கிட், நேற்று மூடிய போது இருந்த 3.9230/9275 என்பதிலிருந்து, அமெரிக்க டாலருடன் 3.9050/9300 என்ற மாற்று விகிதத்தில் வர்த்தகமானது.
மலேசிய தேசிய வங்கி இன்று தனது மூன்றாவது பணவியல் கொள்கைக் குழுக் கூட்டத்தை நடத்த உள்ளது. மலேசியாவின் பணவீக்கம், வளர்ச்சிக் கண்ணோட்டங்கள் குறித்த சமீபத்திய மதிப்பீட்டிற்காகக் காத்திருக்கும் போது, OPR 2.75 சதவீதமாக மாறாமல் இருக்கும் என்று சந்தை பங்கேற்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அமெரிக்காவும், ஈரானும் ஒரு ஒப்பந்தத்தை எட்டி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கத் தயாராக இருப்பதாக எதிர்பார்க்கப்படுவதால், அதிகரித்த ஆபத்துப் பசியும், ரிங்கிட்டின் செயல்திறனை ஆதரித்துள்ளதாக மலேசிய முவமாலாட் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முஹம்மத் அப்ஸானிசம் அப்துல் ரஷித் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்க டாலர் குறியீடு (DXY) 0.43 சதவீதம் குறைந்து 98.023 புள்ளிகளாக இருந்தது.
அந்த முன்னேற்றத்தைத் தொடர்ந்து, இன்று ரிங்கிட் தொடர்ந்து வலுப்பெறும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும், மலேசிய தேசிய வங்கி தனது OPR-ஐ 2.75 சதவீதமாகத் தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகும் முஹம்மத் அப்ஸானிசம் கூறினார்.
"இன்று அமெரிக்க டாலர்-ரிங்கிட் இணை, 3.90 ரிங்கிட் என்ற நிலையை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார் அவர்.
வர்த்தகத் திறப்பில், முக்கிய நாணயங்களின் கூடைக்கு எதிராகவும் ரிங்கிட் அதிகமாக வர்த்தகமாகியுள்ளது.
உள்ளூர் நாணயம், நேற்று மூடிய போது இருந்த 4.6189/6242 என்பதிலிருந்து, யூரோவுடன் 4.6058/6170 ஆகவும், நேற்று மூடிய போது இருந்த 5.3443/3500 என்பதிலிருந்து, பிரிட்டிஷ் பவுண்டுடன் 5.3280/3409 ஆகவும், நேற்று மூடிய போது இருந்த 2.5159/5191 என்பதிலிருந்து, ஜப்பானிய யென்னுடன் 2.5046/5109 ஆகவும் வலுப்பெற்றது.
தொடர்ந்து, ரிங்கிட் பிராந்திய நாணயங்களுடன் ஒப்பிடும்போதும் பெரும்பாலும் அதிகமாக வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.
நேற்று மூடிய போது இருந்த 3.0946/0986 என்பதிலிருந்து, சிங்கப்பூர் டாலருடன் 3.0909/0986 ஆக உயர்ந்தது. மேலும், நேற்று மூடிய போது இருந்த 12.1866/2074 என்பதிலிருந்து, தாய் பாட்டுடன் 12.1536/1898 ஆக வலுப்பெற்றது.
ரிங்கிட் இந்தோனேசிய ரூபியாவுடன், முன்னர் இருந்த 225.6/225.9 என்பதிலிருந்து, 225.4/226.1 என கிட்டத்தட்ட மாறாமல் வர்த்தகமானது. மேலும், பிலிப்பைன்ஸ் பெசோவுடன் 6.39/6.41 என மாறாமல் இருந்தது.
இதற்கிடையில், இன்றைய நிலவரப்படி இந்திய ரூபாய் ஒரு ரிங்கிட்டிற்கு 24.17 காசாக உயரந்துள்ளது. டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 94.58 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
