செய்திகள் வணிகம்
உலகப் பட்டியலில் உயரும் மலேசியா: பிராண்ட் மதிப்பில் மலேசியா ஏர்லைன்ஸ், ஏர்ஏசியாவின் பிரம்மாண்ட வளர்ச்சி
கோலாலம்பூர்:
'பிராண்ட் ஃபைனான்ஸ்' (Brand Finance) நிறுவனம் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய விமான நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில், மலேசியா ஏர்லைன்ஸ், ஏர்ஏசியா ஆகிய இரு நிறுவனங்களும் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
மலேசியாவின் ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்தின் பிராண்ட் மதிப்பு கடந்த ஆண்டை விட 19 விழுக்காடு அதிகரித்து, சுமார் 300 கோடி அமெரிக்க டாலர்களை (RM1,180 கோடி ரிங்கிட்) எட்டியுள்ளது. இதன் மூலம் உலகளாவிய பட்டியலில் மலேசியா 14-வது இடத்தைப் பிடித்துள்ளது.
மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது பிராண்ட் மதிப்பில் 27 விழுக்காடு வளர்ச்சியைப் பெற்று, உலகத் தரவரிசையில் 4 இடங்கள் முன்னேறி 41-வது இடத்தைப் பிடித்துள்ளது.
அந்நிறுவனம் மேற்கொண்டு வரும் "நீண்ட கால வணிகத் திட்டம் 3.0" (Long-Term Business Plan 3.0), உயர்தரச் சேவைக்கான (Premium Positioning) மாற்றம் ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
பெருந்தொற்றுக்கு பிந்தைய மறுசீரமைப்புப் பணிகளைத் தாண்டி, சர்வதேச அளவில் தனது சேவையை விரிவுபடுத்தியிருப்பது அந்நிறுவனத்தின் வருவாயை உறுதிப்படுத்தியுள்ளது.
மறுபுறம், ஏர்ஏசியா நிறுவனம் 17 விழுக்காடு வளர்ச்சி கண்டு, 230 கோடி அமெரிக்க டாலர் பிராண்ட் மதிப்புடன் உலகின் மூன்றாவது மிகச்சிறந்த குறைந்த கட்டண விமான நிறுவனமாகத் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
மேலும், பிராண்ட் வலிமை குறியீட்டில் (BSI) 100-க்கு 87.7 புள்ளிகளைப் பெற்று உலகளவில் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் குறைந்த கட்டண விமான சேவைக்கான தேவை வலுவாக இருப்பதை இது காட்டுகிறது.
உலகளவில் அமெரிக்காவின் டெல்டா (Delta) நிறுவனம் முதலிடத்தைத் தக்கவைத்துள்ள வேளையில், சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் உலகின் வலிமையான விமான நிலையமாகத் தொடர்ந்து நீடிக்கிறது.
மலேசிய விமான நிறுவனங்களின் இந்த வளர்ச்சி, நாட்டின் பொருளாதார மீட்டெடுப்பு, சுற்றுலாத்துறையின் எழுச்சிக்கு ஒரு முக்கிய அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
