செய்திகள் வணிகம்
அடுத்த வார ரிங்கிட் மதிப்பில் சிறிய மாற்றம் எதிர்ப்பார்க்கப்படுகிறது
கோலாலம்பூர்:
அமெரிக்க நாட்டுடன் தொடர்புடைய முக்கியமான தரவு அறிவிப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில், அடுத்த வாரம் ரிங்கிட் அமெரிக்க டாலருடன் 3.96 ரிங்கிட் முதல் 3.98 ரிங்கிட் வரையிலான சிறிய வரம்பில் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வார கவனம், குறிப்பாக பண்ணை அல்லாத ஊதியப் பட்டியல் (NFP) தரவுகளில், அமெரிக்க வேலை சந்தைத் தரவுகளில் இருக்கும் என்று மலேசிய முவமாலாட் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முஹம்மத் அப்ஸானிசம் அப்துல் ரஷித் தெரிவித்தார்.
"அமெரிக்க பெடரல் ரிசர்வ் (Fed) வேலை சந்தை மெதுவாக இருப்பதற்கான உறுதியான ஆதாரங்களைக் கோருவதால், இந்தத் தரவு மிகவும் முக்கியமானதாகும். இல்லையென்றால், இது Fed-இன் கடுமையான பணவியல் கொள்கை நிலைப்பாட்டைத் தக்கவைக்கும்" என்று அவர் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை பரிவர்த்தனைகளில், கடந்த வாரத்தின் முடிவில் இருந்த 3.9630/9670 என்பதிலிருந்து, ரிங்கிட் அமெரிக்க டாலருடன் 3.9690/9740 என்ற மாற்று விகிதத்தில், அதிகமாக வர்த்தகமானது.
கூடுதலாக, இந்த வாரம் முக்கிய நாணயக் குழுக்களுடன் ஒப்பிடும்போது ரிங்கிட் அதிகமாக வர்த்தகமானது.
ரிங்கிட், பிரிட்டிஷ் பவுண்டுடன் 5.3593/3661 என்ற மாற்று விகிதத்தில் (5.3429/3483 என்பதிலிருந்து) சரிந்தது. யூரோவுடன் 4.6417/6476 என்ற மாற்று விகிதத்தில் (4.6312/6358 என்பதிலிருந்து) குறைந்தது. மேலும், ஜப்பானிய யென்னுடன் 2.4907/4942 என்ற மாற்று விகிதத்தில் (2.4808/4834 என்பதிலிருந்து) குறைந்தது.
இருப்பினும், ரிங்கிட் பெரும்பாலான ஆசியான் நாணயங்களுடன் ஒப்பிடும்போது உயர்ந்துள்ளது.
தாய் பாட்டுடன் 12.1711/1932 என்ற மாற்று விகிதத்தில் (12.2183/2363 என்பதிலிருந்து) வலுப்பெற்றது. பிலிப்பைன்ஸ் பெசோவுடன் 6.45/6.47 என்ற மாற்று விகிதத்தில் (6.52/6.53 என்பதிலிருந்து) உயர்ந்தது. மேலும், இந்தோனேசிய ரூபியாவுடன் 228.7/229.2 என்ற மாற்று விகிதத்தில் (230.0/230.3 என்பதிலிருந்து) வலுப்பெற்றது.
தொழிலாளர் தின பொது விடுமுறையை முன்னிட்டு, உள்ளூர் சந்தை வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.
தொடர்ந்து, இன்றைய நிலவரப்படி இந்திய ரூபாய் ஒரு ரிங்கிட்டிற்கு 23.88 காசாக உயரந்துள்ளது. டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 94.84 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
