நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மானியக் கொள்கைகளில் திடீர் மாற்றங்கள் இல்லை என்பதை அரசு உறுதியளிக்கிறது: துணைப் பிரதமர்

கோலாலம்பூர்:

அமலில் உள்ள மானியக் கொள்கைகளில் திடீர் மாற்றங்கள் எதுவும் செய்யப்படாது என்பதை அரசு உறுதியளிக்கிறது.

துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோப் இதனை வலியுறுத்தினார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் நெருக்கடி உலகளாவிய எரிசக்தி சந்தையில் தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருந்தாலும் எரிபொருள் மானிய உத்தரவாதங்கள் தொடர்பான கொள்கைகளில் திடீர் மாற்றங்கள் எதுவும் செய்யப்படாது என அரசு உறுதியளித்துள்ளது.

அரசாங்கம் எடுத்துள்ள இந்த அணுகுமுறை, அவசர முடிவுகளின் அடிப்படையில் அல்லாமல், விரிவான தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.

ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய மேற்கு ஆசிய மோதலின் சவால்களை அரசு அறிந்திருந்தாலும், எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் பெரும்பான்மையான மக்களின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset