நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியில் எத்தனை இந்தியக் கட்சிகள் இணைந்தாலும் மஇகாவின் தொகுதிகள் பாதுகாப்பாக இருக்கும்: டத்தோஶ்ரீ சரவணன் உறுதி

கோலாலம்பூர் -

தேசிய முன்னணியில் கூடுதலாக இந்தியக் கட்சிகள் இணைந்தாலும் கவலை இல்லை.

மஇகாவின் தொகுதிகள் பாதுகாப்பாக இருக்கும் என்று அக்கட்சியின் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம். சரவணன்  கூறினார்.

தேசிய முன்னணி கூட்டணியில் கூடுதலாக இந்தியக் கட்சிகள் இணைவது குறித்து பரவலாக விவாதிக்கப்படுகிறது.

இக்கட்சிகள் இணைவதால் வரும் 16ஆவது பொதுத் தேர்தலில் மஇகாவின் நாடாளுமன்ற இடங்கள் பாதிப்படையாது.

தேசிய முன்னணியின் நட்பு கட்சிகள் என்று அழைக்கப்படும் மலேசிய மக்கள் சக்தி கட்சி, ஐபிஎப், கிம்மா போன்ற கட்சிகள் ஏற்கெனவே முந்தைய பொதுத் தேர்தலில் போட்டியிட்டுள்ளன.

இதனால் அடுத்த பொதுத் தேர்தலில் மஇகாவின்  இடங்களை அது ஒருபோதும் பாதிக்காது.

ஆனால் இந்த பெரிய கூட்டணியின் மூலம் தேசிய முன்னணி ஒட்டுமொத்த வெற்றியை உறுதி செய்வதே எங்கள் நோக்கம்.

அதன் அடிப்படையின் தான் அக்கட்சிகளுக்கு  வாய்ப்புகள் வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கூட அறிவித்துள்ளார்.

இதன் பொருள் மஇகாவின்  நாடாளுமன்றத் தொகுதிகல் பாதுகாப்பாக இருக்கும் என்று அவர் நேற்று தாப்பா தேசிய முன்னணி பெருநாள் கொண்டாட்டத்தில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset