செய்திகள் மலேசியா
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
ஜார்ஜ்டவுன்:
கடந்த மாதம் ஆயர் ஈத்தாமில் உள்ள ஒரு சீன மயானத்தில் அநாகரிகச் செயலில் ஈடுபட்டதற்காக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் முன்னர் 12 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த உள்ளூர் தம்பதியினரை இங்குள்ள உயர் நீதிமன்றம் இன்று விடுவித்தது.
58 வயதான எம். ஜெகதீசன், 37 வயதான ஹலிலா அபு பாக்கர் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக, பிரதிவாதி தரப்பு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை அனுமதித்த பின்னர், உயர் நீதிமன்ற நீதிபதி ரோபியா முகமது இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
தனது தீர்ப்பில், நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட இருவரின் குற்றத்தீர்ப்புகளை உறுதி செய்தது.
ஆனால் 12 மாத சிறைத் தண்டனையை, மார்ச் 23 அன்று கைது செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று வரையிலான சிறைத் தண்டனைக் காலமாக மாற்றியது.
தண்டனையை மறுஆய்வு செய்வது தொடர்பாக அரசுத் தரப்புக்கும் பிரதிவாதி தரப்புக்கும் இடையில் ஒப்புக் கொள்ளப்பட்ட கோரிக்கையை நிராகரிக்க நீதிமன்றத்திற்கு எந்தக் காரணமும் இல்லை என்று நீதிபதி ரோபியா கூறினார்.
குற்றத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் 12 மாத சிறைத் தண்டனைக்கு பதிலாக, கைது செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
