செய்திகள் மலேசியா
14 நீதிபதிகளுக்கு நியமனக் கடிதங்களை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வழங்கினார்
கோலாலம்பூர்:
மாட்சிமை தங்கிய மாமன்னர், சுல்தான் இப்ராஹிம் இன்று இஸ்தானா நெகாராவில் 14 நீதிபதிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார்.
கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் டத்தோ ரவீந்திரன் பரமகுரு, டத்தோ அஸ்மி அரிஃபின் ஆகியோருக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கியதுடன் இவ்விழா தொடங்கியது.
டத்தோ அமர்ஜித் சிங், டத்தோஸ்ரீ முகமட் ராட்ஸி ஹருண், டத்தோ அலிசா சுலைமான், டத்தோ அஹ்மத் ஷஹ்ரீர் முகமட் சல்லே, டீன் வெய்ன் டேலி, டத்தோஸ்ரீ லதிபா முகமட் தஹார் ஆகிய ஆறு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மாமன்னர் நியமனக் கடிதங்களை வழங்கினார்.
கூடுதலாக மாமன்னர் ஆறு பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார்.
அதாவது டாக்டர் சுசானா முஹமட் சைட், யுஸ்ரின் பைட்ஸ் யூசோப், அர்சியா முகமத் அபாண்டி, டத்தோ ஹசிசா காசிம், கான் டெச்சியோங், சூரியாடி ஹசிமா முகமட் ஹாஷிம் ஆகியோர் இதில் அடங்குவர்.
இந்த விழாவில் பிரதமரின் துறையின் சட்டம் நிறுவன சீர்திருத்த அமைச்சர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான், அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
பட்டதாரிகளின் திறமை வீணாகக் கூடாது: வேலை தேடும் இளைஞர்களுக்குக் கூடுதல் உதவிகள்
April 21, 2026, 2:59 pm
வேகமாகச் சென்ற காரில் சிக்கிய RM6 லட்சம் ரிங்கிட் போதைப்பொருள்: 33 வயது ஆடவர் அதிரடியாகக் கைது
April 21, 2026, 2:52 pm
