செய்திகள் மலேசியா
வேகமாகச் சென்ற காரில் சிக்கிய RM6 லட்சம் ரிங்கிட் போதைப்பொருள்: 33 வயது ஆடவர் அதிரடியாகக் கைது
அலோர் காஜா:
பெடாஸ் - ஆயிர் கெரோ நெடுஞ்சாலையில் கடந்த புதன்கிழமை அதிவேகமாக கார் ஓட்டிச் சென்ற 33 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவரைப் போலிசார் தடுத்து நிறுத்தினர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் கார் ஓட்டியதால் நடத்தப்பட்ட சோதனையில், அந்த காரின் பின் இருக்கையில் இருந்த கருப்பு நிறப் பையில் சுமார் RM6 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான எக்ஸ்டாசி (Ekstasi) வகை போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த ஐந்து மாதங்களாகப் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் அந்தச் சந்தேக நபர், தெற்குப் பகுதிக்கு போதைப்பொருளைக் கடத்திச் செல்வது இதுவே முதல் முறை என விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் போதைப்பொருள் சுமார் 13,000-க்கும் மேற்பட்ட போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.
கைதான நபரின் சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் முடிவுகள் எதிர்மறையாக வந்தாலும், அவருக்கு ஏற்கனவே நான்கு போதைப்பொருள் தொடர்பான குற்றப் பின்னணிகள் இருப்பது உறுதியாகியுள்ளது.
சந்தேக நபர் பயணித்த கார், போதைப்பொருள் என மொத்தம் RM6,11,607 மலேசிய ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் போலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தற்போது ஏழு நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அவர் மீது, போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையுடன் குறைந்தது 15 பிரம்படிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
