நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதுவும் இல்லை; பொதுத் தேர்தல் வரை நாங்கள் பெர்லிஸ் மந்திரி புசாரை ஆதரிக்கிறோம்: ஷாஹிடான்

கங்கார்:

வரவிருக்கும் மாநில சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பெர்லிஸ் மந்திரி புசாரை கவிழ்க்க திட்டம் இருப்பதாகப் பரவிய வதந்திகளை பெர்லிஸ் தேசியக் கூட்டணி தலைவர் டத்தோஶ்ரீ  ஷாஹிடான் காசிம் மறுத்துள்ளார்.

இந்தக் கூற்று ஆதாரமற்ற வெளி யூகம் மட்டுமே.

மேலும் மந்திரி புசார் அபு பாக்கர் ஹம்ஸாவின் தலைமைக்கு தேசியக் கூட்டணியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆதரவு அப்படியே உள்ளது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதுவும் இல்லை. அடுத்த பொதுத் தேர்தல் வரை மாநில தேசியக் கூட்டணி மட்டத்தில் உள்ள நாங்கள் மந்திரி பெசாருக்கு முழு ஆதரவு அளிக்கிறோம் என்று அவர் கூறினார்.

முன்னதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மான அச்சுறுத்தலின் காரணமாகவே,

ஏப்ரல் 21 அன்று நடைபெறவிருந்த பெர்லிஸ் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் யூகங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset