நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“நீர்த் தட்டுப்பாடு வருமா?”: மீரி மக்களின் அச்சத்தைப் போக்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மீரி: 

மீரி பகுதியில் உள்ள சுங்கை லிகு நதியின் நீர்மட்டம் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் நீர் விநியோகம் பாதிக்கப்படும் என்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் உண்மையல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தகவலைச் சரவாக் தண்ணீர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.

தற்போது நதியின் நீர்மட்டம் சீராகவும் இயல்பான நிலையிலும் இருப்பதாகத் தெரிவித்துள்ள அந்நிறுவனம், மீரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமான நீர் இருப்பு உள்ளதாக உறுதி அளித்துள்ளது. 

நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுத் திறனுடன் தொடர்ந்து இயங்கி வருவதால், அண்மைக் காலத்தில் நீர் விநியோகத் தடையோ அல்லது பங்கீட்டுத் திட்டமோ அமல்படுத்தப்படாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்கள், 'வாட்ஸ்அப்' வழியாகப் பரப்பப்படும் இத்தகைய பொய்யானத் தகவல்கள் பொதுமக்களிடையே வீண் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. 

எனவே, ஆதாரமற்ற செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முறையான தகவல்களைப் பெற எப்போதும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும், வதந்திகளைப் பரப்புபவர்களுக்குத் துணை போக வேண்டாம் என்றும் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset