நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்ஏசிசி, டான்ஶ்ரீ அஸாம் பாக்கி குறித்து தவறான உள்ளடக்கத்தைப் பதிவேற்றிய நபர் குறித்து எம்சிஎம்சி விசாரணையை தொடங்கியது

சைபர்ஜெயா:

எம்ஏசிசி, அதன் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி குறித்து தவறான உள்ளடக்கத்தைப் பதிவேற்றிய நபர் குறித்து எம்சிஎம்சி விசாரணையை தொடங்கியது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி ஆகியோருக்கு எதிராக டிக் டாக்கில் தவறான உள்ளடக்கங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில்  சந்தேகிக்கப்படும் ஒரு நபருக்கு எதிராக எம்சிஎம்சி ஒரு விசாரணை அறிக்கையைத் தொடங்கியுள்ளது.

விசாரணைக்கு உதவுவதற்காக, சம்பந்தப்பட்ட நபர் பேசியது பதிவு செய்யப்பட்டுள்ளது.

உள்ளடக்கத்தைப் பதிவேற்றப் பயன்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு சாதனத்தையும் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக எம்சிஎம்சி கூறியது.

தற்போதுள்ள சட்டங்களை மீறுவதாகக் கண்டறியப்படும் எந்தவொரு தனிநபர் மீதும் கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சமூக ஊடகத் தளங்களையும் இலக்கவியல் ஊடகங்களையும் பயன்படுத்தும்போது பொதுமக்கள் எப்போதும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என எம்சிஎம்சி கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset