செய்திகள் மலேசியா
துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியான சம்பவம்: கைதான முதியவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்
கோத்தா திங்கி:
துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியான சம்பவத்தில் கைதான முதியவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டது.
இங்குள்ள தாமான் கோத்தா ஜெயாவில் உள்ள ஒரு உணவகத்தில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு நேற்று கைது செய்யப்பட்ட வயதான முதியவத் ஒருவர், அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை ஏழு நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோத்தா திங்கி மாவட்ட போலிஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவரும், இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரியுமான உதவி கண்காணிப்பாளர் நோர் அஜிஜி இந்த்சாம் அளித்த மனுவை ஏற்று, நீதிபதி நூர்கலிடா ஃபர்ஹானா அபு பக்கர் இந்த நீதிமன்றக் காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 5:36 pm
சொந்த ஊரில் எங்களுக்கு வாடகை.. அவர்களுக்கு இலவசமா?
April 20, 2026, 5:10 pm
புக்கிட் ஜாலிலில் சிக்கிய தென்கொரியாக் குற்றவாளி : குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடக்கம்
April 20, 2026, 5:04 pm
நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த நபர் மீட்பு
April 20, 2026, 5:03 pm
ரவீந்திரன் பரமகுரு கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாகிறார்
April 20, 2026, 3:23 pm
கம்போங் பஹாகியா மறுசீரமைப்பு: சட்டப்பூர்வமான கிராமமாக மாற்றச் சபா அரசு திட்டம்
April 20, 2026, 3:18 pm
