செய்திகள் மலேசியா
சொந்த ஊரில் எங்களுக்கு வாடகை.. அவர்களுக்கு இலவசமா?
ஷா ஆலம்:
'உள்ளூர் மக்கள் வாடகை செலுத்த வேண்டியுள்ளது, ஆனால் 'வெளிநாட்டினர்' இலவசமாக வாழலாம்'.
சட்டவிரோத வெளிநாட்டவர்களின் குடியேற்றமாக இருப்பதாகக் கூறப்படும் இங்குள்ள செத்தியா ஆலம் பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் குமுறல்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஷா என்று மட்டும் அழைக்கப்பட விரும்பும் ஒரு நபர், வெளிநாட்டவர்கள் வசிக்கும் சட்டவிரோத கிராமங்கள் இருப்பதால், அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோறியுள்ளார்.
"வெளிநாட்டவர்கள் தன்னிச்சையாக வீடுகளையும், குடியிருப்புகளையும் கட்டுவதை நாங்கள் காண்கிறோம். இருப்பினும், நாங்கள் உள்ளூர் மக்கள், வீடுகளை வாடகைக்கு எடுப்பதற்கும், பிற செலவுகளுக்கும் பணம் செலவழிக்க வேண்டும். இது மிகவும் நியாயமற்றது.
"சோதனைகளும், நடவடிக்கைகளும் முன்னர் மேற்கொள்ளப்பட்டன. முடிந்தால், இந்தச் சட்டவிரோத குடியிருப்புகள் இனி இல்லை என்பதை உறுதி செய்யுங்கள்" என்று அவர் திங்கட்கிழமை சினார் ஹரியனிடம் கூறினார்.
மேலும், இந்தப் பகுதியானது, இந்த மூன்று இடங்களில் வாழும் வெளிநாட்டவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாகத் ரசாக் தெரிவித்தார்.
"ஜாலான் ஹம்ஸாவைச் சுற்றியுள்ள இந்தப் பகுதி, முதலில் பாதைகளுக்கு அருகில் கட்டப்பட்டது. இந்த வெளிநாட்டவர்களின் குடியிருப்புகள் சற்று உள்ளே இருக்கிறது" என்றார் அவர்.
ஆயு என்று அழைக்கப்படும் ஒரு நபர், ஜாலான் பெர்சியாரன் செத்தியா மக்மூரில், வெளிநாட்டவர்கள் என்று நம்பப்படும் நபர்களைத் தனது வாகனம் பலமுறை கிட்டத்தட்ட மோதியதாகவும் கூறினார்.
"இவர்கள் சாலையோரத்தில் உள்ள எண்ணெய் பனைக் காடுகளில் வசிக்கின்றனர். பலமுறை, அவர்கள் அப்படியே சாலையைக் கடக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. நானும் அவர்களைக் கிட்டத்தட்ட மோதியிருக்கிறேன்.
"நான் இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறேன். எனவே, இந்தச் சாலையை நான் ஒவ்வொரு நாளும் பயன்படுத்துகிறேன். இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை நாம் எப்போது வரை எதிர்கொள்ள வேண்டும்?" என்றார் அவர்.
இதற்கு முன்னர், அதிகாரிகளால் பலமுறை சோதனை செய்யப்பட்ட இந்தச் சட்டவிரோதக் குடியிருப்புகள் இன்னும் இருப்பதாகக் கூறும் ஒரு சமூக ஊடகப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பகுதி முழுமையாக மூடப்படுவதை உறுதி செய்வதற்காக, அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
